Pages

Wednesday, April 4, 2012

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மீதான நேற்றைய சூடான விவாதத்தின் விவகாரம் சபையில் (புலி)கூட்டமைப்பு எம்.பி.யான சுரேஷ் கடும் வாய்ச்சண்டை!

Wednesday,April,04,2012
இலங்கை::ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கெதிரான பிரேரணை மீதான நேற்றைய சூடான விவாதத்தின் போது சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு எம்.பி.யான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கிடையில் கடுமையான வாய்ச்சண்டை மூண்டது.

சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர ஆவேசமாக பேச அதற்கு பதிலளித்து சுரேஷ் பேசினார். இந்த சந்தர்ப்பத்தில் எழுந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுரேஷ் எம்.பி.யைப் பார்த்து மிகவும் சத்தமாக ஏதோ கூறவே கோபமடைந்த (புலி)கூட்டமைப்பு சுரேஷ் எம்.பி. கையை நீட்டி ஆவேசப்பட்டுத் திட்டினார். இதன்போது ஒருவருக்கொருவர் மாறி சாடிக்கொண்டனர்.

மேற்படி பிரேரணை தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்தும் பேசினார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் (புலி)கூட்டமைப்பு) சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். இதன்போதே சிரேஷ்ட அமைச்சர் ஆவேசப்பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இணைந்து கொண்டு சத்தமிட்டார்.

இதன்போது முத்தரப்பினருக்கும் இடையில் வாய்ச்சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் கடுமையாக சாடிக் கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment