Pages

Saturday, April 14, 2012

கிளிநொச்சியில் புலிகளின் ஆயுத நூலகம் கண்டுபிடிப்பு!

Saturday, April, 14, 2012
இலங்கை::கிளிநொச்சியில் ஒரு தொகை யுத்த ஆயுதங்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபடித்துள்ளனர்.

வெடிபொருட்கள் மற்றும் பிற யுத்த ஆயுதங்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் எனவும் இவ்விடத்தை அவர்கள் யுத்த ஆயுத நூலகமாக பயன்படுத்தி இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்கால பயன்பாட்டை நோக்காகக் கொண்டு, புலிகள் இந்த ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைகள் காரணமாக பல ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment