Pages

Saturday, April 14, 2012

தில்லிப்பள்ளை பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி: 513ஆவது படைப்பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்!

Saturday, April, 14, 2012
இலங்கை::தில்லிப்பள்ளை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய 513ஆவது படைப்பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள தனியார் பிடிஸ் கல்லூரியின் நிதியுதவியுடன், 14ஆவது கெமுனு வொச் படையினரின் நிர்மாணப்பணிகளின் உதவியுடன் இவ் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

மானிப்பாய் நாதேஸ்வரா ஆரம்ப பாடசாலை, மானிப்பாய் நாதேஸ்வரா மஹா வித்தியாலயம், அலவெட்டி றோமன் கதோலிக் தமிழ் கலவன் பாடசாலை, அலவெட்டி மேற்கு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை ஆகியன இதற்கென தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இப் பாடசாலைகளின் தேவைகள் குறித்து அதிபரிகளிடம் கேட்டறிந்துள்ளதுடன், அத் தேவைகளை மிகக் குறுகிய காலத்தில் செய்துமுடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடிநீர்வசதிகள், கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களுக்கு நிறம் பூசுதல் மற்றும் திருத்துதல், சிறுவர பூங்காவை புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேவேளை பிடிஸ் கல்லூரியால் 800,000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment