Pages

Tuesday, April 3, 2012

அணிசேராக் கொள்கையையே நாம் பின்பற்றுகிறோம்: எந்த நாட்டுடனும் நாம் பகைமை பாராட்டமாட்டோம்: பசில் ராஜபக்ஷ!

Tuesday, April, 03, 2012
இலங்கை::ஜெனீவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கை அணிசேராக் கொள்கையை கடைப்பிடிக்கும் ஒரு நாடு. அந்தடிப்படையில் நாம் எந்த நாட்டுடனும் பகைமை பாராட்டமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடு என்ற வகையில் எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேணவும்,அந்த உறவை மென்மேலும் மேம்படுத்தவுமே விரும்புகின்றோம் எனவும் அவர் கூறினார்.

திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட அங்குரார்ப்பணம் தொடர்பான செய்தியாளர் மாநாடு பொருளாதாரஅபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இச் செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேறகண்டவாறு குறிப்பிட்டார்

இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் கூறுகையில் : எக்ஸ்போ 2012 சர்வதேச கண்காட்சிக்காக 54 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தார்கள்.அவர்களில் ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டின் போது எமக்கு எதிராக வாக்களிக்கப்பட்டாலும் நாம் எந்த நாட்டுடனும் பகைமை பாராட்டத் தயாரில்லை. எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேணவும், அவ்வுறவை மேம்படுத்தவுமே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இச்சமயம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த காரணத்திற்காகவே வாகனங்களின் மீதான வரி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது என்ற கூற்றில் எதுவித உண்மையுமே இல்லை. இவ்வரி அதிகரிப்பு தொடர்பான சட்டங்களில் இந்தியா தொடர்பாக எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் ஒப்பந்தமொன்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி இந்த வரி அதிகரிப்பால் இந்தியா பல நன்மைகளைப் பெறும்.

இதேநேரம், வாகனங்கள் மீதான வரி அதிகரிப்பு தொடர்பில் நெகிழ்வுப் போக்கை கடைப் பிடிக்கும் வழிகள் குறித்து கலந்துரையாடி வருகின்றோம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பல சிபாரிகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரு மொழி கொள்கையை மாத்திரமல்லாமல் இந்நாட்டில் வாழும் சகலரும் மும்மொழியையும் கற்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்க ப்பட்டுள்ளன.

இதற்கென தனியான அமைச்சே அமைக்கப்பட்டுள்ளது. நல் லிணக்க ஆணைக் குழு அமைக்கப்பட முன்பே இந்த அமைச்சு உருவாக்கப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த் தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சகல விவசாய நிலங்களிலும் விவசாயம் செய்கை பண்ணப்பட்டு அறுவடையும் இடம்பெறுகின்றது.

மனிதாபிமான நடவடிக்கையின்போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் பெரும் பகுதி யினருக்கு புனர்வாழ்வு அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் சமூகத்திலும் இணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இந்த ஆணைக் குழுவின் அறிக்கையிலுள்ள பல சிபாரிசுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல சிபாரிசுகள் செயற்படுத்தப் படுகின்றன.

அந்த அறிக்கையிலுள்ள எந்தவொரு சொல்லையும் நாம் மறைக்கவில்லை. அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சகல எம்.பிக்களுக்கும் வழ ங்கினோம். பொதுமக்களின் பார்வைக்கும் விடப்பட்டன. ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பல ஆணைக் குழுக்களின் அறிக்கைகள் வெளியிடப்படக்கூட இல்லை.

ஆனால் ஜனாதிபதி நியமித்த இந்த ஆணைக்குழு அறிக்கையை கையளித்தது. அது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதா? இல்லையா என்பது பிரச்சினை அல்ல என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் சிரேஷ்ட அமைச்சர்கள் ஏ.எச்.எம். பெளஸி, அதா வுட செனவிரட்ன, மில்ரோய் பெர்னா ண்டோ, விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

No comments:

Post a Comment