Pages

Tuesday, April 3, 2012

இராணுவ வாகனம் மோதியதில் வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் பலி!

Tuesday, April, 03, 2012
இலங்கை::இராணுவ வாகனம் மோதியதில் வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு 7.30மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.இந்தச் சம்வம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நெடுங்கேணியைச் சேர்ந்த ந.பாலசிங்கம் (வயது59) என்பவர் கற்குளம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்துள்ளார்.

இதன்போது பலத்த பாட்டுச் சத்தம் மற்றும் பிரகாசமாக மின் விளக்குகளை ஒளிர விட்டபடி வந்த இராணுவத்தினரின் வாகனம் மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த குறித்த முதியவர் நிலத்தில் வீழ்ந்துள்ளார். எனினும் அதனைப் பொருட்படுத்தாத குறித்த வாகனம் அங்கிருந்து சென்றுள்ளது.

இதன் பின்னர் 8.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment