Pages

Monday, April 9, 2012

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு‌‌ள் நாளை முத‌ல் செ‌‌ல்போனு‌க்கு தடை!

Monday, April, 09, 2012
சென்னை::க‌ர்நாடகா, குஜரா‌த் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் உறு‌ப்‌பின‌ர்க‌ள் செ‌ல்போ‌னி‌ல் ஆபாச பட‌ம் பா‌ர்‌த்த ச‌ர்‌ச்சையை தொட‌ர்‌ந்து த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு‌ள் நாளை முத‌ல் செ‌ல்போ‌‌ன் கொ‌ண்டு வர தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

க‌ர்நாடகா ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு‌ள் மா‌நில அமை‌ச்ச‌ர்க‌ள் மூ‌ன்று பே‌ர் செ‌ல்போ‌னி‌ல் ஆபாச பட‌ம் பா‌ர்‌த்தது நாடு முழுவது‌ம் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியது. ஆபாச பட‌ம் பா‌ர்‌த்ததை தொட‌ர்‌‌ந்து மூ‌ன்று அம‌ை‌ச்ச‌ர்களு‌ம் பத‌வியை இழ‌ந்தன‌ர்.

இ‌ந்த பரபர‌ப்பு அட‌ங்குவத‌ற்கு‌ள் குஜரா‌த் மா‌நில ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இர‌ண்டு ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌‌பின‌ர்க‌‌ள் செ‌ல்போ‌னி‌ல் ஆபாச பட‌ம் பா‌ர்‌த்தது‌ம் பெரு‌ம் ச‌ர்‌ச்சையை ஏ‌ற்படு‌த்‌தியது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு‌ள் நாளை முத‌ல் செ‌ல்போ‌‌ன் கொ‌ண்டு வர தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், ப‌‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ள் உ‌ள்பட யாரு‌ம் பேரவை‌க்கு‌ள் செ‌‌ல்போ‌ன் கொ‌ண்டு வர‌க்கூடாது எ‌ன்று சபாநாயக‌ர் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

அ‌ண்மை‌யி‌ல் ச‌ட்ட‌ப்பேரவை‌ நடவடி‌க்கைகளை செ‌ல்போ‌ன் மூல‌‌ம் பட‌ம் ‌பிடி‌த்ததாக தே.மு.‌தி.க., ‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்‌க‌ள் ‌மீது கு‌ற்ற‌‌ச்சா‌ற்று எழு‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்தே ச‌ட்‌ட‌ப்பேரவை‌க்கு‌ள் செ‌ல்போ‌ன் கொ‌ண்டு வர தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டதா அ‌ல்லது ஆபாச பட‌ம் ‌பிர‌ச்சனை காரணமாக தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக எ‌ன்பது தெ‌‌ரிய‌வி‌‌ல்லை.

No comments:

Post a Comment