Pages

Tuesday, April 10, 2012

இலங்கைக்கு கருணாநிதி கண்டனம்!

Tuesday, April 10, 2012
சென்னை::அணுசக்தி மையம் தொடர்பாக இலங்கை புகார் கூறி வருவதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய அணுசக்தி நிலையங்களால் இலங்கைக்கு ஆபத்து இருப்பதாக இலங்கை புகார் கூறி வருகிறது. இது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் திட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அந்த திட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தற்போது கூடங்குளம் பற்றி இலங்கை பிரச்னை எழுப்பியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூற மாட்டேன். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார்.

No comments:

Post a Comment