Tuesday, April 10, 2012இலங்கை::பதினான்கு (14) வயதான சிறுமியொருவரைக் கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கபுஸ்கந்த பிரதேசத்தில் சிறுமியொருவர் ஒரு மாதத்திற்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டது.
சிறுமியைக் கடத்திச் சென்ற 23 வயதான இளைஞர் ஒருவரும் அவரது உறவினர்கள் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட சிறுமி இன்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment