Pages

Saturday, April 14, 2012

எனது சகோதரனின் விடுதலை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை - நிஹால் சுரசேன!

Saturday, April, 14, 2012
இலங்கை::சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கப்பலில் கடமையாற்றும் சிப்பாயை விடுதலை செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அவரது உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரத் சுரசேன என்கின்ற இலங்கையைச் சேர்ந்த கப்பல் சிப்பாய் 14 மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளார்.

டுபாய் கப்பல் நிறுவனமொன்றுக்கு சொந்தமான எம்.வீ.ஓர்னா என்ற கப்பல் ஆபிரிக்காவிலிருந்து சீனா நோக்கி பயணிக்கும்போது சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. இதன்போது சுரசேன உட்பட 19 சிப்பாய்கள் கப்பலில் இருந்துள்ளனர்.

தனது சகோதரனை விடுதலை செய்துகொள்வது தொடர்பாக இதுவரை அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என சுரசேனவின் சகோதரர் நிஹால் சுரசேன நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இலங்கைப் பிரஜையை விடுதலை செய்துக் கொள்வது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக டுபாயிலுள்ள இலங்கைக்கான தூதுவர் சரத் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment