Saturday, April, 14, 2012இஸ்லாமாபாத்::அமெரிக்காவுடனான உறவை புதுப்பிப்பதற்கான புதிய விதிமுறைகளுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தலைமையி லான நேட்டோ படையி னர் பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை குறி வைத்து ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், கடந்த நவம்பரில் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதனால் பாகிஸ்தான் , அமெரிக்கா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, நேட்டோ படைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வழியை பாகிஸ்தான் மூடியது. மேலும் அமெரிக்காவுடனான உறவு தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க நாடாளுமன்றம் முடிவு செய்தது. இதற்கிடையே, இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க வெளியுறவுத் துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு அளித்திருந்த 14 பரிந்துரைகள் குறித்து, நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சில திருத்தங்களுடன் புதிய விதிமுறை க்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
அமெரிக்காவுடன் மீண்டும் உறவை தொடர வும், நேட்டோ படையினருக்கு பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான வழியை திறந்து விடுவும் புதிய விதிமுறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது, அத்துமீறி தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் கூறுகையில், ''பாகிஸ்தான் முடிவை வரவேற்கிறோம். இருதரப்பு உறவை தொடர் வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேநேரம், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிக்கும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்க வேண்டும்'' என்றார்.
No comments:
Post a Comment