Pages

Saturday, April 7, 2012

புலிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் அவ் அமைப்புச் செய்த குற்றச் செயல்களை மறக்க முடியாது - பசில் ராஜபக்ஷ!

Saturday, April, 07, 2012
இலங்கை::புலி பயங்கரவாதிகள் மேற்கொண்ட செயற்பாடகளை நியாயப்படுத்த சில சர்வதேச நாடுகள் முயற்சித்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் புலிகள் அமைப்பு செய்த குற்றச் செயல்களை மறக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

புலிகளின் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேவின் நினைவு தினத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள பெருபாலான மக்கள் கொடூரமான பயங்கரவாத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களை மறைக்கது இருப்பதை மதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை அப்பாவி பொதுமக்களின் மனித உரிமைகளை மீறிய பயங்கரவாதிகள் குறித்து மாத்திரமே தற்போது சர்வதேச பேசி வருவதாகவும் அது குறித்து கவலையடைவதாகவும் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேவின் மனைவி சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment