Friday, April, 06, 2012மண்டபம்::எல்லை தாண்டி, இந்திய பகுதிக்குள் நுழைந்து பிடிபட்ட, இலங்கை மீனவர்கள் மூன்று பேர், விடுவிக்கப்பட்டு, நேற்று இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர்.
இலங்கை நீர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர்கள், பெல்டின், ரவிகரன், விக்னேஸ்வரன். இவர்கள், மார்ச், 29ம் தேதி, நீர் கொழும்பிலிருந்து விசைப்படகில், யாழ்ப்பாணம் செல்லும் வழியில், திசை மாறி, இந்திய எல்லையான, மூன்றாம் மணல் தீடைப் பகுதிக்குள் நுழைந்தனர்.
அப்பகுதியில் ரோந்து வந்த, இந்திய கடலோர காவல் படையினர், இலங்கை மீனவர்களை பிடித்து மண்டபம் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மூவர் மீதும் எவ்வித வழக்கும் பதியப்படாமல் தனியார் லாட்ஜில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.இவர்களை விடுவிக்குமாறு உயரதிகாரிகள் உத்தரவுபடி, மூன்று மீனவர்களும் விசைப்படகில், நேற்று காலை 10.30 மணிக்கு இந்திய கடலோர காவல்படையின் வழிகாட்டுதலில் மண்டபத்திலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர். சர்வதேச கடல் எல்லையில், மதியம் 2 மணிக்கு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment