Thursday, April 05, 2012(நேற்றைய தொடர்)
இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒரு இளைஞன் பொலிஸாரைக் கண் டவுடன் ஒடினான். அவனைத் துரத்தினார்கள். பிடிக்க முடியவில்லை. நிற்கும்படி கூறினார்கள். அவன் நிற்கவில்லை. பொலிஸார் சுட்டனர். அவன் இறந்தான். கடைசியில் பார்த்தால், அவன் எந்தத் தவறும் செய்யவில்லை.
பொலிஸாரைப் பார்த்ததும் ஏதோ பயத்தில் ஓடி யிருக்கிறான். பொலிஸார் நடந்த நிகழ்ச்சியை வர்ணித்து, இம்மாதிரி ஒருவர் செய்யும் போது எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. சுட்டோம். இது தவிர்க்க முடியாது என்று சொன்னார்கள். இந்த விளக்கம் அப்படியே ஏற்கப்பட்டது. கடும் விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை.
அந்த மாதிரி நிகழ்ச்சிகளிலேயே கூட பொலிஸாரின் உரிமை நிலைநாட்டப்படுகிற போது, தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் ஒரு அரசு ஸ்கெளட் போல நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க் கவா முடியும்? அதற்கு இராணுவமே தேவையில்லையே? பொலிஸே தேவையில்லையே? சாமியார்களை அனுப்பி தீவிரவாதிகளே, நீங்கள் யாரையும் கொல்லாதீர்கள். நீங்களும் மனிதர்கள். நாங்களும் மனிதர்கள்.
ஆகையால் நீங்கள் வன்முறையைக் கைவிட்டு எல்லோருடனும் சுமுகமாக வாழுங்கள் என்று உபதேசம் செய்து விடலாமே? சாமியார்களின் எண் ணிக்கை குறையும். அவ்வளவுதான். ஒவ்வொரு சாமியாராகப் போய் உபதேசம் செய்ய, செய்ய அவர்களை இந்தத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று கொண்டே இருப்பார்கள். சாமி யார்களின் எண்ணிக்கை குறையும்.
கேள்வி: ராஜீவ் - ஜயவர்தன ஒப்பந்தத்தின்படி பார்த்தால், வடக்குப் பகுதியும், கிழக்குப் பகுதியும் இணைந்து ஒன்றாக இருக்க வேண்டும்? ஆனால், இப்போது அப்படி இல்லையே?
சோ: இல்லை. அந்த ஒப் பந்தத்தின்படி கிழக்கும் வடக்கும் ஒன்றாக இருப்பது ஒரு ரெஃப ரேண்டத்தின்படி நடக்க வேண்டும். அதாவது மக்கள் வாக்கெடுப்பின்படி நடக்க வேண்டும். அப்போதே கூட கிழக்குப் பகுதியினர், வடக்குப் பகுதியுடன் இணைந்திருப்பதை விரும்பவில்லை. இப்போதும் அதே நிலை தொடரத்தான் செய்யும்.
கேள்வி: அமெரிக்கா, மனித உரிமை மீறல் தீர்மானத்தை இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரக்காரணம், தமிழர்கள் பால் உள்ள அக்கறை அல்ல என்றும், தனது வர்த்தக மற்றும் ராஜரீக நலன்களைக் கருத்தில் கொண்டுதான் அமெரிக்கா இப்படிச் செய்கிறது என்றும் கூறப்படுகிறதே?
சோ: இந்தத் தீர்மானத்தின் மூலமாக அமெரிக்காவின் வர்த்தகம் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது என்பது புரியவில்லை. முன்பு இஸ்ரேலை மனித உரிமைக் கெளன்ஸில் குறி வைத்ததால், அமெரிக்கா இப்போது மற்றவர்களின்மீது பார்வையைச் செலுத்துகிறது. அந்தப் பார்வை முதலில் இலங்கையின் மீது விழுந்திருக்கிறது. இஸ்ரேல் பாதிக் கப்பட்டபோது, அமெரிக்கா மனித உரிமை கொள்கையையே புறக்கணித் தது.
இப்போது ஒபாமாவின் ஆட்சியில் ஒரு மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இப்போதும்கூட அவர்கள் என்ன செய்கிறார்கள்? நீ அன்று இஸ்ரேலைச் செய்தாய் அல்லவா? இன்று இலங்கையைச் செய்கிறேன். நாளை வேறு ஒன்றையும் செய்வேன் என்ற வகையில் செயல்படுகிறார்கள். நாளை அவர்களின் பார்வை காஷ்மீர் பக்கம் திரும்பினால் என்ன செய்வது? அப்போது நமது நிலைமை என்ன?
கேள்வி: இஸ்ரேலையும் இலங்கையையும் இணைத்துப் பேசுவது எப்படிச் சரியாகும்? இந்த இரண்டு நிலைமைகளும் ஒன்றுதானா?
சோ: நான் அந்த இரு நாடுகளையும் இணைத்துப் பேசவில்லை. அந்த பிரச்சினைகள் சமமானவை என்றும் நான் சொல்லவில்லை. இஸ்ரேல் விஷயத்தில் ஐ.நாவின் மனித உரிமைக் கெளன்ஸில் குறுக்கிட்ட போது, அமெரிக்கா இப்படி ஒரு நாட்டை மட்டும் குறிப்பிட்டுச் செயல்படுவது முற்றிலும் தவறானது என்று கூறியது. அந்தக் காரணத்தினால் மனித உரிமைக் கெளன்ஸிலின் நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும் கண்டித்தது. அப்போது அதற்கெல்லாம் மனித உரிமைக் கெளன்ஸில் செவிசாய்க்காததால் அதற்கு அளித்து வந்த நிதி உதவியைக்கூட அமெரிக்கா நிறுத்திவிட்டது. அதைப் புறக்கணித்தது.
அந்தக் கெளன்ஸிலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டது. இப்போது ஒபாமா வந்த போது, அந்தப் புறக்கணிப்பு விலக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் நீ இஸ்ரேலுக்குச் செய்ததை நாங்கள் இலங்கைக்குச் செய்கிறோம் என்று ஐ.நாவின் மனித உரிமைக் கெளன்ஸிலைப் பார்த்து அமெரிக்கா பேசுகிறது. இதுதானே இப்போது நடக்கிறது? அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.
அடுத்ததாக, இதைப் போல் ஒரு தீர்மானத்தை காஷ்மீர் விஷயத்தில் அவர்கள் கொண்டு வந்தால், அப்போது இந்தியாவின் நிலைமை என்ன என்பதையும் நாம்யோசித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த இஸ்ரேல் விஷயத்தைச் சுட்டிக்காட்டினேன்.
கேள்வி: இந்தியா என்னதான் செய்ய வேண்டும் என்று சொல்கிaர்கள்?
சோ: அங்கே உள்ள தமிழர்கள் சிங்களவர்களுக்கு இணையாக எல்லா உரிமைகளையும் பெற்று வாழ இலங்கை அரசு வழி செய்ய வேண்டும். அதற்கு இந்தியா உதவ வேண்டும். அதே சமயத்தில் இதை எல்லாம் சாதித்துத் தருவதற்காக இலங்கைக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்ய வேண்டும். ஒரு அமை தியான நாடாக இலங்கை மீண்டும் தன்னைத்தானே மாற்றி கொள்ள வேண்டும். அதற்கும் இந்தியாவின் உந்துதல் தேவைப்படும். பொருளாதார உதவிகள் எங்கெல்லாம் தேவைப் படுகிறதோ, அங்கெல்லாம் அதை அளிக்க இந்தியா முன்வர வேண்டும்.
கேள்வி: தமிழக மக்களும் இங்கே உள்ள தமிழ்க் கட்சிகளும் இதற்கு உதவி செய்கிற வகை யில் என்ன செய்ய வேண்டும்?
சோ: பேசாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன். இங்கே உள்ள சில தமிழ்த் தலைவர்கள் தான் பிரபாகரனின் முடிவுக்குக் கார ணமானவர்கள். சதாம் உசேன் விசயத் தில் என்ன நடந்தது? உலக நாடுகள் எல்லாம்நிர்பந்தித்து, அமெரிக்காவை தன் மீது எந்த நடவடிக்கையும் எடு க்க விடாமல் செய்துவிடும் என்று கடைசி வரை அவர் நம்பிக் கொண்டி ருந்தார். அமெரிக்கப் படைகள் அங்கே நுழைந்த பிறகுகூட, இந்த மோதல்கள் எல்லாம் நின்று விடும். உலக நாடு கள் அதைப் பார்த்துக் கொள் ளும் என்று அவர்நம்பினார். ஆனால், கடை சியில் என்ன நடந்தது? அவர் இறந்தார்.
அதேபோலதான் பிரபாகரனும், இங்குள்ள தமிழ்த் தலைவர்கள் செய்த பிரசாரத்தை நம்பி, அவர்கள் தனக்காகக் குரலை ஓங்கி எழுப்பி, மத்திய அரசை நிர்பந்தித்து, இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த விடுவார்கள் என்று எதிர் பார்த்தார். கடைசி வரை இந்த எதிர்பார்ப்பிலேயே அவர் இருந்தததால் தான் இறுதியில் அவர் தனது முடி வையே சந்திக்க வேண்டி வந்தது. இந்த மாதிரி அவர் எதிர்பார்த்து, மோசம் போதற்கு இங்கே உள்ள தமிழ்த் தலைவர்கள்தான் காரணம்.
இங்கே உள்ள தமிழ்த் தலைவர் களுக்கு இங்கே பெரிய செல்வாக் கில்லை. அவ்வப்போது இவர்கள், தாங்களே ஒரு படையைத் திரட்டிக் கொண்டு இலங்கைக்குச் சென்று விடு வதாகக் கூட மிரட்டி வந்தவர்கள் என் பதை மறந்து விடக்கூடாது.
கேள்வி:- இலங்கைத் தமிழர் விஷயத்தில், மத்திய அரசுக்கான தனது ஆதரவை தி. மு. க. வாபஸ் வாங்கினாலும் வாங்கும் என்ற பேச்சு இருப்பதால், மத்திய அரசு ஆட்டம் கண்டு விட்டதாக நினைக்கிaர்களா?
சோ:- மத்திய அரசு கவிழ, கலைஞர் காரணமாகிவிட மாட்டார் என்பது மற்ற எல்லோரையும் விட பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் நன்றாகத் தெரியும். ஏனென்றால், கலைஞருக்கு மத்திய அரசின் உதவி தேவை. அதன் உதவி இல்லாவிட்டால், வழக்குகளில் சிக்கியுள்ள, அவரைச் சேர்ந்தவர்கள் மேலும் பல சோத னைகளைச் சந்திக்க நேரிடலாம்.
மத்திய அரசின் ஆதரவு இருக்கும் வரைதான் அந்த வழக்குகளில் இரு ந்து தப்பிக்க, ஏதாவது வாய்ப்புகளைத் தேட அவரால் முடியும். அது மட்டு மல்ல, ஜெயலலிதாவை அரசியல் ரீதியாகச் சந்திப்பதற்குக் கூட, அவ ருக்கு மத்திய அரசின் பலம் தேவை.
காங்கிரஸை, அ.தி.மு.க. பக்கம் துரத்தி விடுவதில் அவருக்கு எந்த ஆர்வமும் இருக்காது. காங்கிரஸ் கூட்டணியை அ. தி. மு. க. விரும்பாமல் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ¤க்கு வேறு வழியில்லை என்ற நிலையை உண்டாக்குவதால், கலைஞருக்கு என்ன லாபம்? ஆகையால், இதை அவர் செய்ய மாட்டார்.
கட்சி வாழ்வதற்காக முன்பு திராவிட நாட்டைத் தியாகம் செய்தார்கள். இப்போது குடும்பம் வாழ்வதற்காக, அவர் இலங்கைப் பிரச்சினையைத் தியாகம் செய்வாரே ஒழிய, மத்திய அரசு பதவியை விட்டு விட மாட்டார். சமமாக அங்கே தமிழர்கள் நடத்தப்படவில்லை என்பதிலும் எந்தச் சந்தேகமும் கிடை யாது. இதையெல்லாம் இலங்கை அரசு சரி செய்ய வேண்டும். ஆனால், தமிழர்களின் இந்தப் பிரச்சினைகள் தீர்வதற்கு வன்முறை வழி அல்ல. தீவிரவாதம் வழி அல்ல.
(தொடரும்)
No comments:
Post a Comment