Pages

Monday, March 26, 2012

ஜெனீவா தீர்மானத்தால் இலங்கையுடனான சர்வதேச உறவு பாதிக்காது: ஜோன் றன்கின்!

Monday, March 26, 2012
அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை பற்றிய தீர்மானம் காரணமாக ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகள், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் உறவுகளில் பாதிப்பு ஏற்படமாட்டாது' என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றன்கின் கூறினார்.

இலங்கைக்கும் இந்த தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு தொடர்புகள் பாதிக்கப்படுவதற்கு காரணம் ஏதும் இருப்தாக எனக்கு தெரியவில்லை.

இனிவரும் காலங்களிலும் இலங்கையின் ஏற்றுமதிக்கான சந்தைகளாக இந்த நாடுகள் விளங்கும்' என இலங்கை ஆடைகள் ஏற்றுமதி சந்தையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பேசிய றன்சின் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான 2011ஆம் ஆண்டு ஏற்றுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகவும் இறக்குமதி 245 மில்லியன் ஆகவும் இருந்தது. ஐக்கிய இராச்சியம் இலங்கையில் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியான 4 பில்லியன் டொலரில் அரைப்பங்கு ஐரோப்பாவுக்கே செல்கின்றது. இலங்கையில் ஐக்கிய இராச்சியத்தை பிரதான தளமாகக் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட கம்பனிகள் உள்ளன' என அவர் கூறினார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை நன்மையடைய முடியும். உலக போட்டியிடும் ஆற்றல் சுட்டியில் இலங்கை கடந்த வருட நிலையிலிருந்து 10 புள்ளிகள் முன்னேறியுள்ளதாக அவர் கூறினார்.

ஏற்றுமதியாளருக்கும் கொள்வனவு செய்வோருக்கும் நன்மை தரக்கூடிய ரூபாயின் பெறுமதி இறக்கத்தை அவர் இதன்போது வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment