Thursday, March 22, 2012இலங்கை::மனித உரிமைகள் பேரவை தவறான முறையில் வழிநடத்தப்பட்டுள்ளது - மஹிந்த சமரசிங்க:-
சிறு பிரிவினரின் தேவைக்காக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஊடாக, மனித உரிமைகள் பேரவை தவறான முறையில் வழிநடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்...
கண்ணாடி வீடுகளில் வசிப்போர் மற்றவர் மீது கல்லெறியும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துக் கொண்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவையில், இலங்கை சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த யோசனைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாது எனவும் இது மனித உரிமை பேரவையின் கொள்கைகளுக்கு முரணானது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் முதலில் தம்மை குணப்படுத்தி கொள்ள வேண்டும் என கூறி, அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment