Thursday, March 22, 2012

இந்திய மத்திய அரசு தமது ஆட்சியை நீடிக்கவே பிரேரணைக்கு ஆதரவளித்தது - இலங்கை!

Thursday, March 22, 2012
இலங்கை::தற்போதைய நிலையில் இந்தியா எடுத்துள்ள தீர்மானமானது அவர்களின் அரசியல் இருப்பை பாதுகாத்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவையின் பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் இந்தியா தமது பிராந்தியத்தில் உள்ள சக்திமிக்க நாடு என்பதுடன் இலங்கையின் நேச நாடு என்று குறிப்பிட்ட பதில் பேச்சாளர், தமிழ் நாட்டில் இருந்து வந்த அழுத்தத்தினாலேயே இந்திய மத்திய அரசானது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

அதுமாத்திரமின்றி இந்த பிரேரணையின் மூலம் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்ட நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதற்கு உதவி புரிய தாம் தயார் என்றே இந்தியா குறிப்பிட்டுள்ளதாக கூறிய அமைச்சரவைப் பேச்சாளர், இந்த பிரச்சினைக்கு இந்தியா வேறு ஏதேனும் ஒரு வகையில் இலங்கைக்கு உதவி புரியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஆளும் காங்கிரஸ் தரப்பினர் பல இடங்களில் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில் தமிழ் நாட்டின் உதவியில் ஆட்சியில் இருப்பதாகவும், இதனால் இதனைத் தவிர்த்து வேறேதும் கருத்தினைக் கூறி 2014 ம் ஆண்டு வரைக்கும் ஆட்சியை கொண்டு செல்ல முடியாது என்பதாலேயே இம்மாதிரியான கருத்தினை தெரிவித்ததாகவும் அமைச்சரவைப் பதில் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment