Sunday, March 25, 2012இலங்கை::அரசியல் தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் அரசாங்கத்துடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டு - தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் அரசாங்கத்துடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கம் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கும் இடையில் நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஜனவரி மாதம் இடைநிறுத்தப்பட்டது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என கூட்டமைப்பு அறிவித்ததனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன.
அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகர்வதற்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், சில முக்கியமான விடயங்கள் பற்றி இணக்கப்பாடு எட்டப்படும் வரையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த தயார் என்றால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment