Friday, March 23, 2012இலங்கை::தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பியுள்ளனர்.
நேற்றையதினம் நாடு திரும்பிய குழுவில் 73 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய இலங்கையர்களில் 24 ஆண்களும் 21 பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்களை அதிகாரிகள் விடுவித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
No comments:
Post a Comment