Wednesday,February,08,2012இலங்கை::இலங்கைக்கு சென்றுள்ள அமெரிக்க உயர்பிரதிநிதி Stephen Rapp, தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை அரசினை சீற்றம் கொள்ள வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்ற விவகாரங்களுக்கான, அமெரிக்கா அரசாங்கத்தின் சர்வதேச உயர்பிரதிநிதி Stephen Rapp அவர்கள் இருக்கின்றார்.
இந்தச் சந்திப்புக் குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அவர்கள்….
90 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில், பேசவேண்டிய விடயங்கள் சகலது பற்றியும் பேசினோம். இதுபற்றி மேலதிகமாக சொல்ல வேண்டியதில்லை. சுமூகமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொள்வது தொடர்பில், இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்குற்றங்கள் குறித்தான அறிக்கையொன்றினை, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் மார்ச் 7ம் திகதிக்கு முன்னர், Stephen Rapp அவர்கள் சமர்பிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில்,இலங்கை மீதான போர்குற்றச்சாட்டுக்கள் குறித்து நேரடியாகவே, இலங்கை அரசுடன் குறிப்பாக, ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி,இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்களில் காத்திரமான பங்கினை Stephen Rapp அறிக்கை வகிக்கும் என (புலி)கூட்டமைப்பு தரப்பு இராஜதந்திர செயற்பாட்டாளர்களால் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment