Pages

Wednesday, February 8, 2012

2 புலி தற்கொலை குண்டுதாரிகளின் தகவல்களை மறைத்தார் - 18 மாதச் சிறை!

Wednesday,February,08,2012
இலங்கை::புலிகளின் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை அறிந்தும் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு தெரிவிக்காத குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண்ணுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ 18 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த பெண்ணுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்த சட்டமா அதிபர், இந்த பெண் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment