Thursday, February 09, 2012இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூடட்மைப்பின் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன!
குறிப்பாக சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப்பின் கோரிக்கையை அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளன.
ஈ.பி.டி.பி.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனிமைப்படுத்தப்பட்டு விடும் என ஈ.பி.டி.பி.யின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டமுனைப்புக்களில் பின்வாங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சுயாட்சி அதிகாரங்கள் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்கோரிக்கை முட்டாள்தனமானது, ஏன் இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றார்கள் என்பதுபுரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான கோரிக்கைகள் இருந்தால் அதனை பாராளுமன்றத்தெரிவுக்குழுவின் முன்னிலையில் வைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பிர்களை விடவும்தாம் அதிகளவு விருப்பு வாக்குளை பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடும்உரிமை தமக்கும் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய
நாட்டின் நான்கு வீதமான மக்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபிரதிநிதித்துவம் செய்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்கதெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே யோசனைகளை முன்வைக்க வேண்டுமெனஅவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், இந்த கோரிக்கைகளை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுயாட்சி தொடர்பான கொள்கைகளை கூட்டமைப்பு கைவிட வேண்டுமென அவர்குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத கொள்கைகளினால் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கொடூரங்களின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது நல்லிணக்க நடவடிக்கைகளின் மூலம் சுயாட்சி தொடர்பானகருதுகோள்கள் விரைவில் முறியடிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.என்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிதமிஞ்சிய கோரிக்கைகளை முன்வைத்துவருவதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
சுயாட்சி அதிகாரங்கள் தேவையென்றால் அதனை ருத்ரகுமாரனிடம் கூட்டமைப்பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.தே.க
பெரும்பான்மை மக்கள் சுயாட்சி அதிகாரங்களை கோரவில்லை என ஐக்கியதேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை சகல கட்சிகள் மட்டுமன்றி நாட்டின் பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
சுயாட்சி அதிகாரம் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டுமென அவர்குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை, இந்தியாவுடனானபேச்சுவார்த்தை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை ஆகியவற்றைகருத்திற் கொண்டு அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென திஸ்ஸ அத்தநாயக்கதெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுயாட்சி அதிகார கோரிக்கை நியாயமற்றது என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கம் தீர்வுத் திட்டத்தை வழங்க காலதாமதிப்பதனால் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைகளை முன்வைப்பதாகக்குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தஅரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சியற்ற தன்மையே பிரிவினைவாதம் என்றமோசமான கோட்பாடு தலைதூக்கக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் குறித்த பிரதேசங்களில் உரிய முறையில் சிவில் நிர்வாகத்தைஏற்படுத்தியிருந்தால் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பிரிவினைவாதத்தை வலியுறுத்தியிருக்கமுடியாது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment