Thursday, February 09, 2012இலங்கை::கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோகிராம் போதைப் பொருளையும்
போதைப் பொருள் ஒழிப்புப் பணியக உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களுடன் முச்சக்கர வண்டியொன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று பிரதேசத்தில்
மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த ஹெரோய்ன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் கைது!
இளம்வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கொக்கட்டிச்சோலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
15 வயதான இளம்வயது சிறுமி ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மல்லியப்பூ தோட்டத்தில் மான் வேட்டை; இருவர் கைது!
சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் மான் வேட்டையாடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதுடன் அவர்களால் வேட்டையாடப்பட்டதாகக் கூறப்படும் மானையும் நேற்று மாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 45 கிலோ எடையுடைய மான் சந்தேகநபர்களால் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கைக்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இலங்கைக்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை - திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திக்வெல்ல பகுதி விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில் அதிகாலை 3 மணியளவில் நபரொருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
உபாதை ஒன்றுக்காக சிகிச்சை பெற தான் இலங்கை வந்ததாகவும் சம்பவ தினத்தன்று விடுதியில் தனது கணவர் குடிபோதையில் இருந்தபோது வெளியில் இருந்து வந்த நபர் ஒருவர் தன்னுடன் உறவு கொண்டதாகவும் ஜெர்மன் சுற்றுலா பயணி குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர்தான் தன்னுடன் உறவு கொள்கிறார் என தான் நினைத்தபோதும் சிறிது நேரத்தின் பின் கணவர் உறங்கிக் கொண்டிருப்பதை காணவே கூச்சலிட்டு எழுந்ததாகவும் அப்போது தன்னுடன் இருந்த நபர் தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேபநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment