Pages

Sunday, February 12, 2012

புலிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து அரசியலுக்கு வந்தவர்களால் சுயமாக சிந்திக்க முடியாது: வெளிநாட்டு அழுத்தங்கள் தீர்வை பெற்றுக்கொடுக்காது-சுவாமி!

Sunday, February 12, 2012
இலங்கை::புலிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து அரசியலுக்கு வந்தவர்களால் சுயமாக சிந்திக்க முடியாது. புலிகளின் கொள்கைகளுடனேயே அவர்கள் செயற்படுகின்றனர். இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை நம்ப மறுத்து அவர் மீது சந்தேகங்கொண்டு செயற்படுகின்றனர். இதனாலேயே இலங்கையில் இதுவரையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டு கடந்த வாரம் (07) இலங்கை வந்த அவர் இரத்தினபுரி சிவனாலயத்தின் போஷகர் எம்.ஆர். நகுலேஸ்வரன் வீட்டுக்கு வருகை தந்திருந்தார்.

அவரை அங்கு தினகரன் வாரமஞ்சரிக்காக பேட்டி கண்டோம். அதனை இங்கு தொகுத்து தருகின்றோம்.

கேள்வி: இலங்கைக்கான திடீர் விஜயம் குறித்து?

பதில்: தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டு இல ங்கை வந்தேன். தைப் பூசமென்பதனால் கதிர்காமகந்தனை சந்தித்த பின்னர் மலையகத்தில் உள்ள ஒரே சிவன் ஆல யமான இரத்தினபுரி சிவன் ஆலயத்தையும் தரிசிக்க வேண்டு மென்பதற்காக அக் கோயிலின் போஷகர் எம்.ஆர். நகு லேஸ்வரனின் அழைப் பிற்கமைய இங்கு வந்தேன்.

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நீங்கள் அடிக்கடி கருத்து வெளியிடுகின்aர்களே?

பதில்: இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு அழு த்தங்களுக்கு பணியாமல் தைரி யமாக புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தில் வெற்றி கண்டுள்ளார். இதற்காக அவரை பாராட்டு கின்றேன்.

கேள்வி: இறுதி யுத்தத்தில் பல அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றதே? ஜனாதிபதிக்கெதிராக சர்வதேசம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றதே.

பதில்: இலங்கை ஜனாதிபதியை (மஹிந்த ராஜபக்ஷ) எக்காரணம் கொண்டு சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது. அதற்கான வாய்ப்பும் கிடையாது. புலிகளை கொன்றமை வரவேற்கக்கூடியது.

கேள்வி: புலிகளை அழித்தமை சரி என்று கூறுகின்aர்களா?

பதில்: தலைவர் அமிர்தலிங்கம், சபாரட்ணம், போன்றவர்கள், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் புலிகள் வியாபார நோக்கத்துடன் செயற்பட்டதுடன் இறுதியில் சில தமிழ் நாட்டு தலைவர்களின் பேச்சை கேட்டு தாளமாடினர். புலிகள் இல்லாத காரணத்தினால் இன்று தென்பகுதியிலும் உட்பட எங்குமே குண்டு வெடிப்பு இல்லை. கடந்த காலங்களில் வெளியில் சென்றால் வீடுதிரும்புவது நிச்சயமில்லை. குறிப்பாக அப்பாவி தென்பகுதி தமிழர்கள் சிறையில் வாடினர். அவர்களில் குறிப்பாக மலையக மக்கள் வெளியில் செல்ல முடியாது தவித்தனர். அவ்வாறானதொரு சூழ்நிலை தற்போது இல்லையென நம்புகின்றேன்.

கேள்வி: புலிகள் இவ்வாறு யுத்தத்தில் தோல்வியடைந்தமைக்கான காரணம் என்னவென்று கருதுகின்aர்கள்?

பதில்: புலிகள் இறுதியில் தமது சுயநலனுக்காக செயற்பட்டனர். ராஜிவ் காந்தியை கொலை செய்தமை அவர்களின் பெரும் முட்டாள்தனமான செயல் புலிகள் இதனை எதற்காக செய்தார்கள் என்பது தெரியாது கூலிக்காகவா? அல்லது வேறு யாரது அழுத்தமா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் இது மூடத்தனமானது.

ராஜிவ் காந்தி வடகிழக்கில் ஒரு இலட்சம் இராணுவத்தினரை கடமையிலீடுபடுத்தி சமாதானத்தை உருவாக்க பாடுபட்டவர். அவர் இருந்திருந்தால் தமிழர் பிரச்சினை முடிவிற்கு வந்திருக்கும்.

கேள்வி: தமிழர் பிரச்சினைக்கு தீர்வு எப்போது கிடைக்கும்? இதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காததன் காரணம் என்ன?

பதில்: தமிழர் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் தீர்வு வழங்க வேண்டும். மாறாக வேறு யாரும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. வெளிநாடுகளோ, இந்தியாவோ இதில் தலையிட முடியாது. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு அதில் வேறு யாரினது அழுத்தமும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இலங்கையை இரண்டாகப் பிரித்து தீர்வு காண முடியுமென்று நாம் நம்ப முடியாது. இலங்கை மீது இந்தியா தேவையற்ற அழுத்தம் கொடுத்தால் இலங்கைக்கு வேறு பல நாடுகள், உதவிகள் செய்யும் கலைஞர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு உதவி செய்ய இந்தியா பின்வாங்கியதால் இன்று சீனா இலங்கையை ஆக்கிரமித்துக் கொண்டது.

கேள்வி: அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாது என தமிழ்க் கூட்டமைப்பு கூறுகிறது. நீங்கள் எவ்வாறு இதனை கருதுகின்aர்கள்?

பதில்: புலிகளின் பயமுறுத்தலாலும், இன்னோரன்ன தேவைகள் காரணமாக அரசியலுக்கு வந்தவர்களே மஹிந்த ராஜபக்ஷவினை நம்ப மறுத்து அவர் மீது சந்தேகங்கொள்கின்றனர். இது அர்த்தமற்றது. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

கேள்வி: தமிழர் பிரச்சினை குறித்து உங்களின் கருத்தென்ன?

பதில்: தென்பகுதி சிங்களவர்களின் அபிலாஷைகளுக்கு பங்கம் ஏற்படாமல் தமிழருக்கு சுய உரிமை கிடைக்கப் பெறவேண்டும். தமிழர்களுக்கு பிரச்சினை உள்ளது. அதனை நாம் மறுக்கக் கூடாது. இதற்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

கேள்வி: தமிழ் நாட்டுத் தலைவர்களில் அநேகமானவர்கள் புலிகளுக்கு சார்பாக குரல் கொடுத்து வருகின்றார்களே?

பதில்: இவர்கள் பணத்திற்காக கோஷம் போடுகின்றனர். தமிழர் (இலங்கை) பிரச்சினை என்ன என்பது இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து வீம்பாக பேசக்கூடாது?

கேள்வி: இலங்கையில் வடகிழக்கு தவிர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் உள்ளனர். இவர்கள் குறித்து?

பதில்: வடகிழக்கு தமிழர்களை விட இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் மிகவும் கீழ் மட்ட நிலையிலுள்ளனர். இவர்களை இந்தியா கண்டு கொள் ளவில்லை. இவர்கள் லால்பகதூர், இந்திரா காந்தி போன்றவர்கள் இலங்கையில் மேற்கொண்ட ஒப் பந்தம் காரணமாக இலங்கையில் இவர்களில் ஒரு பகுதியினர் தங்கி யுள்ளனர். இவர்களின் பிரச்சினை பாதுகாப்பு உரிமை போன்ற விட யங்களில் இந்தியா கூடுதல் அக் கறை செலுத்த வேண்டும். இதனை இந்தியா செய்ய மறுத்து வருகின்றது.

கேள்வி: இந்திய அரசாங்கத்தை தொடர்ந்து குற்றம் சாட்டுகிaர்கள். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்காக நீங்கள் அல்லது உங்கள் கட்சி ஏதேனும் செய்யலாமே.

பதில்: இலங்கை வாழ் இந்தியர்களுக்காக மட்டுமல்லாமல் உலக வாழ் இந்திய வம்சாவளி யினர்களின் நலன் கருதியும் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை முன் கொண்டு வரும் பொருட்டு கூடிய விரைவில் டில்லியில் மாநாடு ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளேன். அதன் பின் அவர்களின் பிரச்சினைக ளில் பெரும் பகுதி தீர்வு கிட்டும்.

No comments:

Post a Comment