Wednesday,February,08,2012இலங்கை::பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் குறித்து கருத்து வெளியிடுவதைவிடவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற நிழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, புதுக்குடியிருப்பு கொம்பாவில் பகுதியில் அமைக்கப்பட்ட 206 வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு நடைபெற்றது.
செட்டிக்குளம் மற்றும் கதிர்காமர் இடைத்தங்கள் முகாம்களிலிருந்த 206 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கிராமங்களில் தங்கியுள்ள ஏனையவர்களும் விரைவில் மீள குடியமர்த்தப்படுவார்கள் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment