Wednesday,February,08,2012நாகப்பட்டிணம்::நாகை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேரை கடலோர காவல் படையினர் பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்திய கடலோர காவலர் படையினர் இன்று நாகை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர் கடலோர காவல்படையினர்.
பிடிக்கப்பட்ட 25 பேரும் இலங்கை மீனவர்கள் என்று விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சென்னை காசிமேடு காவல்துறையினரிடம் கடலோர காவல்படையினர் ஒப்படைத்தனர்.
இலங்கை மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment