Wednesday,February,08,2012இலங்கை::வெள்ளைக்கொடி விவகார வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி உயர் , பொன்சேகா சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்ததரணி நலின் லத்துவஹெட்டி உயர் நீதிமன்றில் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் இரண்டாம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் நிமல் காமினி அமரதுங்க, ஜீ.ஏ ரத்நாயக்க, சத்யா ஹெட்டிகே, பிரியசாத் டெப் ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மேன்முறையீடு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல்நீதிமன்ற வழக்கு கோவை 10 தினங்களுக்கு முன்னரே தமக்கு கிடைத்ததாக மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி இதன்போது நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அதுகுறித்து ஆராய்வதற்கு தமக்கு போதியளவு கால அவகாசம் இருக்கவில்லை எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
அத்தோடு நீதியரசர்கள் குழாமிற்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருசில உறுப்பினர்கள் தொடர்பில் மனுதாரருக்கு ஆட்சேபனை இருப்பதாகவும், அதுகுறித்து நீதிமன்றத்தில் இரண்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைப்பது தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லையென அரச தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இதற்கமைய மே மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் சரத் பொன்சேக்காவின் மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சரத் பொன்சோ சிறைவைக்கப்பட்டு இரண்டு வருடங்கள்; ஆர்ப்பாட்டம் ஆரம்பம்!
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சோ சிறைவைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இதில் அனோமா பொன்சேக்கா மற்றும் எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பும், அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment