Pages

Tuesday, February 7, 2012

இந்தியா - இலங்கை நாளை மோதல் : முதல் வெற்றி கிடைக்குமா!

Tuesday, February 07, 2012
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்தியா, ஆஸி.யிடம் படுதோல்வியடைந்தது. இந்நிலையில் 2வது ஆட்டத் தில் இலங்கையை இந்திய அணி நாளை எதிர்கொள்கிறது. பெர்த்தில் காலை 9.50 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 20-20ல் கிடைத்த வெற்றியை 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தக்கவைத்து கொள்ளும் என எதிர்பார்த்த நிலையில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 65 ரன் வித்தியாசத்தில் தோற்க நேரிட்டது.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் டோனி 2 முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களு டன் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாளைய ஆட்டத்தில் அஸ்வினை நீக்கிவிட்டு இர்பான் பதானுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். அவரது பந்து ஓரளவு ஸ்விங்காகும். மேலும் பேட்டிங்கிலும் கடைசி வரிசையில் கைகொடுப்பார். ரெய்னா அல்லது காம் பீர் நீக்கப்பட்டு சேவாக் அல்லது மனோஜ்திவாரி சேர்க்கப்படக்கூடும்.

நாளைய ஆட்டத்தில் வென்றால் மீதமுள்ள ஆட்டங்களில் நெருக்கடி இருக்காது. இலங்கை அணி சமீபகாலமாக பல்வேறு தோல்விகளை சந்தித்துள்ளது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸி. அணிகளுக்கு எதிரான தொடர்களில் தோல்வி கண்டிருந் தது. தற்போது ஜெயவர்த்தனே மீண்டும் கேப் டன் பதவியேற்றுள்ளார். இதனால் தில்ஷான் நெருக்கடியில்லாமல் அதிரடியில் மிரட்டக்கூடும். தரங்கா, சங்ககரா, சந்தி மால், ஆங்க்லோ மேத்யூஸ், சமர வீரா ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுக்க கூடும். பந்துவீச்சில் மலிங்கா, ரங்கனா ஹெராத் நெருக்கடி கொடுப்பார்கள்.

No comments:

Post a Comment