Pages

Tuesday, February 7, 2012

பசுபதி பாண்டியன் கொலையில் முக்கிய குற்றவாளியை நெருங்கியது போலீஸ்!

Tuesday, February 07, 2012
திண்டுக்கல்::பசுபதி பாண்டியன் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சுபாஷ் பண்ணையாரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அவர் பிடிபடுவார் என தனிப்படையினர் கூறினர். பசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் நிர்மலா, ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரை சேர்ந்த 7 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். முக்கிய குற்றவாளியான சுபாஷ் பண்ணையாரை பிடிக்க சென்னை, பெங்களூர், மும்பை, கோவா ஆகிய நகரங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும், அவர் வெளிநாடு தப்பிச் செல்லக்கூடும் என்பதால் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரது படத்தை அனுப்பி பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து தனிப்படையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுபாஷ் பண்ணையாரின் இருப்பிடத்தை அடையாளம் கண்டுள்ளோம், அவர் தப்பி விடாத வகையில் வியூகம் அமைத்து வருகிறோம். அவரை இன்னும் சில நாட்களில் பிடித்து விடுவோம்’’ என்றார்.

No comments:

Post a Comment