Pages

Saturday, February 11, 2012

சேலம் இலங்கைத் தமிழர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் முகாம்!

Saturday, February 11, 2012
சேலம்::மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் அளிக்கும் சிறப்பு முகாம் இன்று காலை துவங்கியது. இதற்காக சென்னையில் உள்ள இலங்கை தூதரக துணை ஆணையர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 14 பேர் கொண்ட குழு சேலம் வந்தனர்.

இவர்களது வருகையை முனனிட்டு அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையும் மீறி தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க மாநிலத் தலைவர் பூமொழி, காமராஜ் ஆகியோர்,

வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை முற்றுகையிட்டு, இலங்கைப் போரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்தபோது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தது ஏன் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு பிறப்புச் சான்றிதழ் அளிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment