Saturday, February 11, 2012கோவை::நட்சத்திர ஓட்டலில் இலங்கை மந்திரி போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை ஊரக தொழில்துறை அமைச்சர் ஆறுமுக தொண்டைமான்(46). இவரது நண்பர் இல்ல திருமணம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஆறுமுக தொண்டைமான், மற்றொரு நண்பரை சந்திக்க கோவை வந்தார். இரவு ரேஸ்கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினார். அவருடன் உதவியாளர்கள் ரோகன் டென்னிஸ், ராஜா மணிகண்டன் ஆகியோரும் தங்கினர்.
நள்ளிரவு போதையில் ஓட்டல் ரிசப்ஷனுக்கு வந்த ஆறுமுகதொண்டைமான், அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் ஜாடையில் பேசியதாக கூறப்படுகிறது. ஓட்டல் ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி அறைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், ‘என்னை ஒன்றும் செய்ய முடியாது, நான் இந்திய அரசின் கெஸ்ட்’ என்று கூறி அறைக்கு திரும்ப மறுத்துள்ளார். அமைச்சரின் ரவுசு நீடிக்கவே, போலீசுக்கு தகவல் பறந்தது. போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் அப்பாதுரை, ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் சென்று மந்திரியை சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து அவர் வாக்குவாதம் செய்யவே, போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று அவரது அறையில் தள்ளி பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment