Pages

Wednesday, February 8, 2012

புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தபால்முத்திரைகளை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் கோரிக்கைவிடுத்துள்ளது!

Wednesday,February,08,2012
இலங்கை::புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தபால்முத்திரைகளை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

நோர்வேக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் இந்த விடயம் குறித்து அந்நாட்டுஅரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

நோர்வேயில் அண்மையில் 77 பேரை படுகொலை செய்த அன்ரேஸ் பியரிங்பிரிவி;க்கின் உருவப்படத்தைக் கொண்ட தபால் முத்திரைகளை வேறும் நாடுகள்வெளியிட்டால், அதனை நோர்வே அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என இலங்கையின் சிரேஸ்டஅரசாங்க அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சு, தபால் தொடர்பாடல் அமைச்சு ஆகியற்றிடம் புலிகளின் தபால் முத்திரை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தூதரக அதிகாரிகள்குறிப்பிட்டுள்ளனர்.

அன்ரேஸ் பியரிங் பிரிவிக் புலிகளைமுன்மாதிரியாகக் கொண்டு இயங்கியதாக பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத அமைப்பின் சின்னங்களை தபால் முத்திரையாக வெளியீடுசெய்வதற்கு அனுமதி அளித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இலங்கை அரசாங்கம்சுட்டிக்காட்டியுள்ளது.

தபால் முத்திரை வெளியிடுவதனால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகளைஅறிந்திருக்கவில்லை என்ற நோர்வேயின் நியாயப்படுத்தலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment