Pages

Wednesday, February 8, 2012

சட்டசபையில் தி.மு.க.தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது: இல.கணேசன் பேட்டி!

Wednesday,February,08,2012
புதுக்கோட்டை::புதுக்கோட்டையில் பா. ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒரு ஆண்டு ஆன பிறகும் அங்கு வாழும் அப்பாவி தமிழர்களுக்கு உரிமை கொடுக்கப்படவில்லை. தமிழர்கள் கட்டும் வீடுகளில் புத்தர் சிலை வைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

இந்தியாவில் இருந்து செல்லும் பிரதிநிதிகள் ஆழ்ந்து கவனிப்பதில்லை. ராஜபக்ஷே மீது ஐ.நா. குற்றச்சாட்டு தெரிவித்தும், அதை அவர் சரிசெய்யவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம், சுப்ரமணியசாமியின் குற்றச்சாட்டை மறுக்க வில்லை. சி.பி.ஐ. கொடுத்த ஆவணங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆர்.ராசாவிற்கு கிடைத்த ஆவணங்கள் ப.சிதம்பரத்திற்கு கிடைக்க வில்லை என்பது ஏற்க கூடியதாக இல்லை.

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலைஞர், பா.ஜ.க. மதவாத கட்சி. பாபர் மசூதி மற்றும் குஜராத் கலவரங்கள் மீண்டும் வேண்டுமா என்று பேசியது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க.வை சீண்டுவது சரியல்ல. தற்போது குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் கூட மோடியை ஏற்றுக்கொள்கின்றனர்.

பா. ஜ.க. என்றும் நல்ல திட்டங்களை வைத்துதான் மக்களை சந்திக்கும். கூடங்குளம் அணுமின் நிலையம் வர வேண்டும் என்பது எங்கள் கருத்து. அதை தடுக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 6-வது வகுப்பு வரை கட்டாய தமிழ்ப்பாடம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம்.

விஜயகாந்த் கட்சி சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டு இல்லை என்றால், இந்த அளவு சீட்டு வந்திருக்காது. எதிர்க்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.

காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் பாரபட்சம் காட்டுகிறது. அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது அரசுக்கு கேடு. தமிழகத்தில் பா.ஜ.க.வை மேலும் பலப்படுத்த வருகிற ஏப்ரல் மாதம் மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அணி வர வாய்பில்லை. அதேபோல் தேசிய அளவில் காங்கிரஸ்-பா.ஜ.க. தான் பிரதான கட்சிகள். எனவே வருகிற 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment