Tuesday, February 07, 2012இலங்கை::கொழும்பு நீதிமன்றத்தை அண்மித்த பகுதியில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயமான குறித்த பகுதியில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள டி.ஐ.ஜி காரியலயத்திற்கருகில் இருந்து இரண்டு குண்டுகளும், வாழைத்தோட்டப்பகுதியல் இருந்து 8 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதியான சரத்பொன்சேக்கா கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவையொட்டி நாளைய தினம் நீதிமன்றத்திற்கு முன்னால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இன்று வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
நாளைய ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே வெடிகுண்டுகள் குறித்த பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் வைக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தற்போது குறித்த பகுதியில் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், விசேட அதிரடிப்படையினரும், குண்டு செயலிழக்கும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா? என காவற்துறையினர் தேடுதல் நடத்திவருவதுடன் பலரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment