Tuesday, February 07, 2012கனடா::கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 568 அகதிகள், அவர்களுக்கு முன்னர் அகதிகளாக அங்கு சென்ற இலங்கையர்களை விட, கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
த நெசனல் போஸ்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஓசியானிக் லேடி கப்பலில் சென்ற 76 பேருள், ஒருவர் மாத்திரமே அகதி அந்தஸ்த்து பெற்றுள்ளார்.
மற்றுமொருவர் நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோன்று சன் சீ கப்பலில் சென்ற 400க்கும் அதிகமான அகதிகளில் மூவர் மாத்திரமே அதிக அந்தஸ்த்து பெற்றுள்ளனர்.
ஏனையவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கையில் இருந்து கனடா போன்ற நாடுகளுக்கு குடிப்பெயரும் பலர், அங்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் இருந்து கனடா செல்கின்ற 38 சதவீதமானவர்கள் தொழி;ல் வாய்ப்பின்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் தமது தகமையை விட குறைவான தொழில்களை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment