Thursday, February 09, 2012இலங்கை::கிளர்ச்சி காரணமாக பதவியை ராஜினாமா செய்த மாலைதீவின் முன்னாள்ஜனாதிபதி முஹமட் நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீடீன் பாரியார் மற்றும் பிள்ளைகள் இன்று காலை, கொழும்பை சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் கொழும்பை வந்தடைந்தனர் எனஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் எங்கு தங்க வைக்கப்படுவார்கள், அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமா என்பது தொடர்பில் எந்தவித கருத்துக்களும்வெளியிடப்படவில்லை.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி நசீடீன் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தற்போதைய மாலைதீவு ஜனாதிபதி முஹமட் வஹீடிடம்கோரியுள்ளார்.
இதேவேளை, பதவியை இராஜினாமா செய்யுமாறு துப்பாக்கி முனையில் கிளர்ச்சியாளர்கள் மிரட்டியதாக முன்னாள் ஜனாதிபதி நசீட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment