Pages

Thursday, February 9, 2012

எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கூட தகுதி இல்லாதவர் விஜயகாந்த்: ராமராஜன்!

Thursday, February 09, 2012
சென்னை::எம்ஜிஆருடன் புகைப்படம் எடுக்கக்கூட தகுதி இல்லாதவர் அரசியல் ஆதாயத்துக்காக அவர் பெயரை உச்சரித்து வருகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நடிகர் ராமராஜன் குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டையில் அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ராமராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:

தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட மக்கள் நலனுக்கான திட்டங்கள் அனைத்தையும் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் செயல்படுத்தி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்து உள்ளார்.

ஜெயலலிதா தலைமையில் நேர்மையான, தூய்மையான அதிமுக தொடரும். ஏழை, எளியவர்கள் மற்றும் பெண்கள் அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக உள்ளனர். நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

இந்த வெற்றியின் மூலம் ஜெயலலிதா யாரை சுட்டிக்காட்டுகிறாரோ அவரே பிரதமராவார். திமுக தலைவர் கருணாநிதி பற்றி மேடைக்கு மேடை பாராட்டி பேசியவர்தான் விஜயகாந்த்.

எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுப்பதற்கு கூட தகுதி இல்லாத விஜயகாந்த் தற்போது அரசியல் ஆதாயத்துக்காக அவரது பெயரை உச்சரித்து வருகிறார்.விஜயகாந்தை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவர் என்று ராமராஜன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment