Pages

Wednesday, February 8, 2012

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

Wednesday,February,08,2012
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தில் இருந்து 563 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 3 பைபர் படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டி அடித்தனர்.

இதனால் மிகவும் குறைவான மீன்களுடன் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். எங்களின் வாழ்வாதாரமாக உள்ள மீன்பிடி தொழிலுக்கு பல கெடுபிடிகளை விதிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும்‘‘ என்றனர்.

No comments:

Post a Comment