Pages

Tuesday, February 7, 2012

பிரித்தானியாவில் கடந்த மாதம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கோகுலவதனி மயூரன் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டார்!

Tuesday, February 07, 2012
லண்டன்::பிரித்தானியாவில் கடந்த மாதம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை பெண்ணான கோகுலவதனி மயூரன், கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 வயதுடைய கோகுலவதனி மயூரன் கடந்த ஜனவரி 31ம் திகதி கொலின் ஹில் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.

இவர் காணாமல் போன சம்பவத்தை அடுத்து இரண்டு நாட்களில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கோகுலவதனி மயூரன் நேற்று (06) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரித்தானிய பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment