Pages

Tuesday, February 7, 2012

அமைச்சர் கெஹெலிய நாடு திரும்பவுள்ளார் - பேராசிரியர் ஆரியரத்ன அதுகல!

Tuesday, February 07, 2012
இலங்கை::அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாடு திரும்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இன்று முற்பகல் தம்மை தொடர்புகொண்டு விரைவில் நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

மெல்பன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வழுக்கி விழுந்தமையினால் அமைச்சர் நேற்றைய தினம் விபத்திற்குள்ளானார்.

அமைச்சரின் கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment