Friday, February 03, 2012இலங்கை::அமெரிக்காவின் உலக அமைதி நடவடிக்கை அமைப்பின் வளங்கள் மதிப்பீட்டு அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு உண்மையைக் கண்டறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள அமைதி ஆதரவு நடவடிக்கைப் பயிற்சி நிறுவனத்தின் அமைதிகாப்புப் பயிற்சிகளின் தரம்தொடர்பாக மதிப்பீடு செய்யவே இவர்கள் கொழும்பு சென்றுள்ளதாகவும் தகவல்கள் மேலும்குறிப்பிடுகின்றன.
அமெரிக்காவின்பசுபிக் கட்டளைப் பீடத்தின் பல்தேசியப் பயிற்சிப் பிரிவின் தலைவர் ஸ்கொட்வெய்டி, தலைமையிலான இந்தக் குழுவில் ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
குறித்தகுழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை இராணுவத் தளபதியைக் கொழும்பில் சந்தித்துப்பேசியுள்ளனர். இதன்போது, இலங்கை இராணுவத்துக்கு ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற மேலதிகபடையினரை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் இலங்கை இராணுவத்தளபதி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தவகல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
குறுகியகாலஇடைவெளிக்குள் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பெண் படையினரை உள்ளடக்கிய 3பற்றாலியன் படையினரை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக்குழுவினர் நேற்று முன்தினம் குகுலேகங்கவில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா அமைதிகாப்புப் படையில்பணியாற்றச் செல்லும் படையினருக்கான பயிற்சி முகாமுக்கும் சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment