Pages

Tuesday, February 7, 2012

ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றில் குற்றவாளியாக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது-அமைச்சர் விமல் வீரவன்ச!

Tuesday, February 07, 2012
இலங்கை::ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றில் குற்றவாளியாக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது-அமைச்சர் விமல் வீரவன்ச:-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் குற்றவாளியாகநிறுத்தும் முனைப்புக்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றது என வீடமைப்பு அமைச்சர்விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியை ஆஜர் செய்ய முயற்சி எடுக்கப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றும் நோக்கில் அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது என அவர்குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் இலங்கைக்குஎதிராக கையொப்பங்களை திரட்டும் பணிகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதேஅமெரிக்காவின் பிரதான இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய இராஜதந்திரிகள் இருவர் இலங்கைக்கு விஜயம்செய்ய உள்ள நிலையில் விமல் வீரவன்ச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment