Pages

Tuesday, February 7, 2012

மீண்டும் போரை உண்டாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சி-விநாயகமூர்த்தி முரளிதரன்!

Tuesday, February 07, 2012
இலங்கை::மீண்டும் போரை உண்டாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சி-விநாயகமூர்த்தி முரளிதரன்:-

வடக்கு கிழக்கில் மீண்டும் போரை உண்டாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சித்து வருவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்பற்றுகின்றனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இளைஞர்களின் மத்தியில் மீண்டும் பிரிவினைவாத விஷத்தை விதைக்க முயற்சிக்கப்படுகின்றது எனவும் வெளிநாட்டு சக்திகளும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இயங்கி வருகின்றன என குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment