Tuesday, February 7, 2012

வெளிநாட்டவரின் தலையீடின்றி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் சக்தி எமக்கு இருக்கிறது-இலங்கை!

Tuesday, February 07, 2012
இலங்கை::தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு யாதார்த்த பூர்வமான கருத்தை வெளியிட்டார். இந்தக் கருத்தை அரசாங் கத்தை எதற்கெடுத்தாலும் கண்டித்து, குறைகாணும் எதிர்க்கட்சியின ருக்கு இப்போதாவது ஞானோதயத்தை ஏற்படுத்துமென்று நாம் நம்புகிறோம்.

சிலர் எங்களைப் பார்த்து நாம் கோடான கோடி ரூபாவை செலவிட்டு, தேசத்திற்கு மகுடம் என்ற பெயரில் ஒரு பெரிய களியாட்ட விழாவை கொண்டாடுகிறோம் என்று ஏளனம் செய்கிறார்கள். அவர்களுக்கு பிரதம மந்திரியாகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த ஆர். பிரேமதாஸ நடத்திய கம்உதாவ களியாட்ட விழாக்களை நாம் ஞாப கப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தன்னுடைய பிறந்த தினத்தை பல நாட்களுக்கு தொடர்ச்சியாக கொண்டாடும் முகமாகவே முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ கம்உதாவ என்ற பெயரில் நாட்டின் நாலா பக்கங்களிலும் எமது தேசிய பொருளாதாரத்தில் இருந்து பெருமளவு பணத்தை செலவிட்டு, கம் உதாவ களியாட்ட விழா கொண்டாட்டங்களை நடத்தி மகிழ்ந்தார்.

கம்உதாவ கண்காட்சி, களியாட்ட விழாவிற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் நிரந்தரமானவை அல்ல. பெருமளவு பணத்தை அர சாங்கம் செலவிட்டு, இந்தக் கட்டடங்களை நிர்மாணித்தாலும் அவை தரம் குறைந்தவையாகவும், அவற்றிற்கு பயன்படுத்தும் பலகைகள் ஓரிரு வருடங்களில் உக்கிப் போய்விடுகிறதென்று இவற்றை ஆய்வு செய்த கட்டடக் கலைஞர்களும், பொறியியலாளர்களும் வேதனை தெரிவித்திருந்தார்கள்.

கம்உதாவ நடைபெற்று ஓரிரு ஆண்டுகளில் கம்உதாவ கொண்டாட்டங் களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் சிதைந்து போய், அவற் றில் கால்நடைகளும், பாம்பு, உடும்பு போன்ற உயிரினங்கள் இருப் பதற்கு ஒரு இயற்கையான சூழலை இந்தக் கட்டடங்கள் அமைத் துக் கொடுத்துள்ளன. கதிர்காம கம்உதாவ கண்காட்சி கட்டடம், புத்தள கம்உதாவ கண்காட்சி கட்டடம் போன்ற பல கம்உதாவ கட்டடங்கள் சீர்குலைந்து போய் அவற்றை எவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்திருக்கின்றன.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சிசாலைகளுக்கு நிர்மாணிக்கப்படும் கட்ட டங்கள் நிரந்தரமானவை. இந்தத் தடவை அநுராதபுரம், ஒயாமடுவ வில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நாட்டுக்கு பயன்தரக்கூடியதாக அமைந்துள்ளது. அங்கு நிர்மாணிக் கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம் இந்த கண்காட்சி முடிவடைந்த பின்னர், அப்பிரதேசத்தின் பிரதேச செயலக காரியாலயமாக பயன் படுத்தப்படுமென்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

கம்உதாவ களியாட்ட விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக முன் னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவினால், நாட்டின் சகல நகரங் களிலும், கிராமங்களிலும் நான்கு திசைகளிலும் உள்ள மக்களுக்கு நேரத்தை காட்டக்கூடிய மணிக்கூட்டு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட் டன. காலப்போக்கில் அவை செயல் இழந்து போயின. ஒரு மணிக்கூட்டு கோபுரத்தின் நான்கு திசையிலும் வெவ்வேறான நேரங்கள் பதிவாகியிருப்பதைப் பார்த்து மக்கள் ஏளனம் செய் வதும் உண்டு. படிப்படியாக இந்த மணிக்கூட்டு கோபுரங்களும் செயல் இழந்து, கால்நடைகளினதும், கட்டாக்காலி நாய்களினதும் வசிப்பிடமாக மாறியிருக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இத்தகைய கடந்தகால தவறுகளை திருத்தும் முகமாக நன்கு திட்டமிட்டு, தேசத்திற்கு மகுடம் கண் காட்சியை நாட்டின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய வகையில் செய்து முடித்துள்ளார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்காக அநுராதபுரம் பிரதேசத்தில் புதிதாக காபட் போட்ட நெடுஞ்சாலைகள் இப்போது அமைக்கப்பட்டுள்ளன. அது போன்று சகல அமைச்சுகளின் பணி களை நெறியாக நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை செய்வதற் கும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்துள்ளது.

ஜனாதிபதி அவர்கள் இன்னுமொரு உன்னத கருத்தையும் தமது தேசத் திற்கு மகுடம் உரையில் தெரிவித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட பிர தேசம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இலங்கை பிரஜைகளாகிய நாம் அனைவரும் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாகவோ, எந்த மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணி வாங்கி, வீடுகளை கட்டி நிம்மதியாக வாழ் வதற்கு பூரண சுதந்திரம் இருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, இனிமேல் நம்நாட்டு மக்கள் நாம் வடக்கை, கிழக்கை, மேற்கை, தெற்கை அல்லது மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஆடம் பரமாக கூறிக்கொள்வதற்கு பதில் நாம், இலங்கை மாதாவின் பிள்ளை கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்பட வேண்டுமென்று சொன்னார்.

ஜனாதிபதி அவர்கள் இன்னுமொரு கருத்தையும் வெளியிட்டார். எங் கள் நாட்டின் உள்நாட்டு பிரச்சினைகளை நாங்களே சமாதானமாக பேசித்தீர்த்துக் கொள்ளும் வலுவைப் பெற்றுள்ளோம். எங்களுக்கு வெளிநாட்டவரின் ஆலோசனையோ, அனுசரணையோ அவசிய மில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எங்கள் நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் தங்களை எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து, இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு விரும்பினால் சகல அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொண்டு, அங்கு தங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் முன்வைத்து ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு உறுதுணை புரிய வேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கருத்தை வலியுறுத்துவதாக ஜனாதிபதியின் இந்த யோசனை அமைந்திருக்கிறது. நாம் அனை வரும் இந்நாட்டு மன்னர்களாக இருக்கும் போது, எதற்காக எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு மற்ற நாடுகளினதும், சர்வ தேச அமைப்புகளினதும் உதவியை கேட்க வேண்டும் என்ற கருத்தை நாம் மக்களின் அவதானிப்புக்காக முன்வைக்க விரும்புகிறோம்.

No comments:

Post a Comment