Saturday, February 11, 2012இலங்கை::பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (WEDF) நிறுவனமானது காத்தான்குடி பெண்களின் நலன் கருதி பெண்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தங்களது பிரச்சினைகளை முறைப்பாடு செய்து தீர்வுகளைக் காண்பதற்கு முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு பொலிஸ் நடமாடும் சேவை ஒன்றினை காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளருமான சல்மா ஹம்ஸா அவர்களின் ஏற்பாட்டில் 11.02.2012 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணிவரை பெண்களுக்கு மாத்திரம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடையாள அட்டை பாஸ்போட் காணாமல் போனவர்கள் மற்றும் விவாகரத்து, தாபரிப்பு, காணி சம்மந்தமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்காக இந்நடமாடும் சேவையினை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண விரும்புவோர் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளிக்குமாறு இவ்வமைப்பு கேட்டுக் கொள்கின்றது .
இடம்:
WEDF அலுவலகம்
சேர்மன் இப்றாகீம் வீதி
காத்தான்குடி-01
No comments:
Post a Comment