Pages

Friday, February 3, 2012

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் கைதி அறையில் கைதியொருவர் மரணம்!

Friday, February 03, 2012
இலங்கை::அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் கைதி அறையில் கைதியொருவர் மரணமான சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனையை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவரே மாரடைப்பால் இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் இன்று காலை 8 மணியளவில் 8 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை நீதவான் முன் ஆஜர்படுத்துவதற்காக 10 மணியளவில் நீதிமன்றக் கைதிக்கூண்டில் வைக்கப்பட்டார். 11 மணிக்கு அவர் நீதவான் முன்னிலையில் ஆஜராகுவதற்கு அழைக்கப்பட்டபோது அவர் வரவில்லை.

அதன்பின் அதிகாரிகள் கைதி அறைக்குள் சென்றுபார்த்தபோது அச்சந்தேக நபர் இறந்தநிலையில் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்...

இரத்தினபுரி கஹவத்த கொடகெதற பிரதேசத்தில் மர்மமான முறையில் இரட்டைக் கொலை!

இரத்தினபுரி கஹவத்த கொடகெதற பிரதேசத்தில் மர்மமான முறையில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்தின் போது அம்மாவும் மகளுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்களுடைய வீட்டிற்கு ஐந்து கிலோ மீற்றர் தொலைவிலிருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 31ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இக் கொலைக்கான காரணமோ, குற்றவாளிகளோ இனங்காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment