Monday, February 06, 2012இலங்கை::கூட்டமைப்பு, தங்களுடைய கோரிக்கைகளை புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் பெற்றுக்கொள்ளட்டும்-விமல் வீரவன்ச:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , தங்களுடைய கோரிக்கைகளை புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனிடம் பெற்றுக்கொள்ளட்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அமைச்சர் விமல் வீரவன்ச, கொழுப்பில் இருந்து வெளிவரும் (The island ) நாளேட்டுக்கு கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புலிகளின் தமிழீழத்தின் இடைக்கால அரசின் பிரதமரான உருத்திரகுமாரனிடம், ஈழப் பிரச்சனையைப் பற்றித் தங்களுக்கு வேண்டிய வகையில், தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
எல்லைகளை மட்டுப்படுத்தாத புலிகளின் தமிழீழத்தை உருவாக்கும் முயற்சியில் உருத்திரகுமாரன் ஈடுபட்டிருக்கிறார் என்றும் விமல் வீரனவன்ச தெரிவித்துள்ளார்.
சில தொழிற்சங்கங்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன –விமல் வீரவன்ச!
சில தொழிற்சங்கங்கள் நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளில்ஈடுபட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களேஇவ்வாறு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகங்களில் தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்ளும்நோக்கில் சில தொழிற்சங்கங்கள் ஒருநாள்அடையாள வேலைநிறுத்த போராட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அண்மைக்காலமாக தொழிற்சங்கங்களினால் நடத்தப்பட்டுவரும் போராட்டங்கள் வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குலக நாடுகளின் சதித் திட்டத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டியது சகல பிரஜைகளினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதுஅமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment