Monday, February 06, 2012இலங்கை::புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளை முறியடிக்க காத்திரமானபொறிமுறையொன்று அவசியமானது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்றஉறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
சில வெளிநாட்டு அரசியல்வாதிகள் ஈழப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சில அரசியல்வாதிகள் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகத்தெரிவித்துள்ளார்.
புலி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரித்தானிய வெளிவிவகாரஅமைச்சர் டேவிட் மி;ல்லிபான்டுக்கு தொடர்பிருந்தமையை விக்கிலீக்ஸ்அம்பலப்படுத்தியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்படும் வரையில் குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென எவரும் கோரவில்லை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் தமது கணவரை படுகொலை செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத் தரப்பினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத்தெரிவிக்கும் தரப்பினர் புலிகளின் குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதில்லை எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment