Pages

Thursday, February 2, 2012

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 42 பேர் எதிர்வரும் 8ம் திகதி விடுதலை!

Thursday, February 02, 2012
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 42 பேர் எதிர்வரும் 8ம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் - ஓயாமடுவ பகுதியில் இடம்பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் வைத்து எதிர்வரும் 8ம் திகதி இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் 10,450 சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment