Pages

Saturday, February 4, 2012

13 ஆவது அரசியலமைப்பு குறித்து வேறெந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை - தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பு!

Saturday, February 04, 2012
இலங்கை::13 ஆவது அரசியலமைப்பு குறித்து வேறெந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை - தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பு:-

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேறெந்த கட்சியுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்ததை நடத்துவதற்கு தேவையில்லை என தமிழ்த் தேசிய (புலிகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அரசியலமைப்பில் சட்டமாக உள்வாங்கப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைகள் மூலம் அதற்குக் காலத்தைக் கடத்துவது தேவையற்றதாகும் என்றும் (புலிகூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் ஜனாதிபதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தமிழ் தேசிய (புலிகூட்டமைப்பு குறிப்பிடுகின்றது.

பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் , காணி மற்றும் மாகாண சபைகளை இணைத்தல் முறைமை ஆகிய விடயங்கள் இந்த அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக (புலிகூட்டமைப்பு கூறியுள்ளது.

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஏற்கனவே கூறியுள்ள நிலையில் அதனை அவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாகவும் (புலிகூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தைகளில் முனைப்புக் காட்ட முடியும் என்றும் தமிழ்த் தேசிய (புலிகூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேராவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment