Pages

Thursday, January 5, 2012

புதிய அணையின் பொறுப்பை மத்திய, தமிழக அரசே ஏற்கட்டும் : உம்மன் சாண்டி!

Thursday,January 05, 2012
இடுக்கி: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய அணையை நிர்வகிப்பதில், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடமளிக்கத் தயார் என்று, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்து இருக்கிறார். மேலும், புதிய அணை தொடர்பான தங்களின் கோரிக்கை, தற்போது தேசிய அளவில் அங்கீகாரம் பெறும் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு, தங்களின் உறுதியான நிலைப்பாடே காரணம் என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்துடன் நீரை பகிர்ந்துக் கொள்ளத் தயார் என்ற தங்களின் நிலையை, உச்சநீதிமன்றத்தின் ஐவர் குழு, பரிசீலிக்க சம்மதித்துள்ளது என்றும், உம்மன் சாண்டி தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட 999 வருடக் குத்தகையின்படி, முல்லைப் பெரியாறு அணை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், புதிய அணை கட்டும் திட்டத்தை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், கூட்டாக நிர்வகிக்கலாம் என கேரள அரசு யோசனை கூறியுள்ளது.

No comments:

Post a Comment